இதனால், எண்ணெய் நிறுவனங்கள், வர்த்தக காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல், இவற்றை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன.
வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் விலை கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மே மாதத்தில் 745 ரூபாயிலிருந்த வர்த்தக சிலிண்டர், ஜூன் மூன்றாவது வாரம் 824.75 ரூபாய்க்கும், நேற்று முன்தினம் முதல் 103.35 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 928.10 ரூபாய்க்கு விற்கிறது. கடந்த நான்கு மாத காலத்தில், 218.10 ரூபாய் அதிகரித்து இருப்பது, ஓட்டல்கள், பெரிய தொழிற்சாலைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வர்த்தக சிலிண்டரின் விலை அதிகரிப்பால், ஓட்டல், கார்களில் வீட்டு சிலிண்டரை உபயோகிக்க துவங்கியுள்ளனர். வீட்டு சிலிண்டர் வெளி மார்கெட் விலை 500 ரூபாயில் இருந்து 750 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவன காஸ் சிலிண்டர்களும் 20 சதவீதம் அதிகரிப்பு செய்துள்ளன.
இது குறித்து, ஓட்டல் உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, மளிகை சாமான்களின் விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், சமையலுக்கு பயன் படுத்தப்படும் சிலிண்டரின் விலையும் உயர்ந்துள்ளது. இது ஓட்டல் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சாப்பாடு, டிபன் வகைகளை, வரும் 15ம் தேதிக்குப் பின் உயர்த்த திட்டமிட்டு இருந்த நாங்கள், இந்த வாரமே விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஓட்டல் உரிமையாளர் கூறினார்.
நன்றி : தினமலர்
1 comment:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
Post a Comment