நன்றி : தினமலர்
Monday, August 3, 2009
ஓ.என்.ஜி.சி.,யில் இருந்து ரூ.5,300 கோடிக்கு ஆர்டர் பெற்றது எல் அண்ட் டி
இந்தியாவின் மிகப்பெரிய இஞ்சினியரிங் கம்பெனியான எல் அண்ட் டி., அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.,யிடமிருந்து ரூ.5,300 கோடிக்கு இரண்டு ஆர்டர்களை பெற்றிருக்கிறது. மும்பையில் செயல்படுத்த இருக்கும் ஆஃப்ஷோர் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் இரண்டு ஆர்டர்கள் எல் அண்ட் டி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை ஹை நார்த் பிராசஸ் ஃபிளாட்ஃபார்ம் திட்டத்தில், அங்குள்ளவர்களுக்கு குடியிருப்பு கட்டும் திட்டம் ஆகியவற்றின் ஆர்டர் எல் அண்ட் டி.,க்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பிராசஸ் கேஸ் கம்பரசன் மோடுல்ஸை சப்ளை செய்யவும் ஆர்டரை பெற்றிருக்கிறது. இதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களும் செய்திருக்கின்றன. கடந்த 1990 ம் ஆண்டில் இருந்தே நாங்கள் ஆயில் கம்பெனிகளின் திட்டங்களையும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் செயல்படுத்தியும் வருகிறோம் என்றார் எல் அண்ட் டி.,யின் சிஎம்டி நாயக்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net
thanks Ram
Post a Comment