Tuesday, July 7, 2009

கடந்த 60 ஆண்டுகளாக பட்ஜெட்டில் குறிப்பிடப்படும் பாகிஸ்தான் தர வேண்டிய ரூ.300 கோடி கடன்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு, பாகிஸ்தான், இந்தியாவுக்கு ரூ.300 கோடி தரவேண்டி யிருந்தது. அது நம் நாட்டு முதல் பட்ஜெட்டில் ( 1950 - 51 நிதி ஆண்டு ) கடன் ( லயபிலிட்டி ) பகுதியில் அப்போது எழுதப்பட்டது. ஆனால் இன்று வரை அந்த கடனை பாகிஸ்தான் நமக்கு வரவில்லை. எனவே இந்தியாவின் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் அந்த தொகை ரூ.300 கோடி கடனாக குறிப்பிடப்பட்டு வருகிறது. நேற்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த 2009 - 10 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டிலும் ' பிரிவினைக்கு முன் பாகிஸ்தான் இந்தியாவுக்க தர வேண்டிய கடன் ரூ.300 கோடி ' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் பட்ஜெட்டில் இப்போது காணப்படும் மொத்த லயபிலிட்டி ரூ.34,95,452 கோடியில் இந்த தொகை 0.008 சதவீதம்தான் என்றாலும், கடந்த 60 வருடங்களாக அந்த தொகை லயபிலிட்டியாக காண்பிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த தொகைக்கு இந்தியா வட்டி எதுவும் சேர்க்காமல் அசல் ரூ.300 கோடியை மட்டுமே தொடர்ந்து கடனாக காட்டி வருகிறது.
நன்றி : தினமலர்


No comments: