Friday, April 3, 2009

இந்தியா முழுவதும் பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் நேற்று வேலை செய்யவில்லை

யாரும் எந்த பேங்க் ஏ.டி.எம்.மிலும் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எந்த ஏ.டி.எம்.மும் வேலை செய்யாமல் போய் விட்டது. ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து, அவரவர் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளின் ஏ.டி.எம்.மில் தான் பணம் எடுக்க வேண்டும் என்பதில்லை. எந்த பேங்கின் ஏ.டி.எம்.என்றாலும் பரவாயில்லை. அதில் பணம் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு சேவை கட்டணம் எதுவும் கிடையாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மாதத்தில் முதல் சில நாட்கள் வரை, பெரும்பாலானவர்கள் சம்பள பணத்தை எடுக்க ஏ.டி.எம்.,செல்வதால் அந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுக்கலாம் என்றதால் அவரவர் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏ.டி.எம்.களில் கடந்த இரண்டு நாட்களாக கடும் கூட்டம் இருந்தது. ஆனால் பணம் எடுக்க சென்றவர்களில் பலர் பணம் எடுக்க முடியாமல்தான் திரும்பினர். அவர்களுக்கு பணத்திற்கு பதிலாக வந்தது ' டிரான்ஸாக்ஷன் டிக்லைன் ' என்ற மெசேஜ் தான். இந்தியாவில் அதிகம் ஏ.டி.எம்.களை வைத்திருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ பேங்க் களின் உயர் அதிகாரிகள் இதனை ஒத்துக்கொண்டனர். மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ஏ.டி.எம்.களை பயன்படுத்தியதால், இன்டர் - பேங்க் டிரான்ஸாக்ஷனை கவனிக்கும் நேஷனல் பைனான்ஷியல் ஸ்விட்ச் ( என்.எஃப்.எஸ்.) இல் ஓவர்லோட் ஆகி விட்டது. அதனால்தான் ஏ.டி.எம்.கள் வேலை செய்யாமல் நின்று விட்டன என்றனர்.
நன்றி : தினமலர்


No comments: