பணவீக்கம் இதுவரை இல்லாத வகையில் மார்ச் இரண்டாவது வாரத்தில், 0.27 சதவீதமாக குறைந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தும் கூட இந்த நிலை உருவாகியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 0.44 சதவீதம். இதை விட 0.17 சதவீதம் குறைந் துள்ளது. பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க பணசப்ளையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் திட்டக்கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா கூறும் போது, 'இன்னும் கூட அடுத்த சில வாரங்களுக்கு பணவீக்கம் குறையலாம். அதனால் பணச் சுருக்க பாதிப்பு வராது. பொதுவாக உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு இந்த ஆண்டின் கடைசியில் நீங்கும்' என்று கூறியுள்ளார்.நன்றி : தினமலர்







No comments:
Post a Comment