Saturday, February 7, 2009

அமெரிக்காவில் வேலையில்லாதோர் விகிதம் 7.6 சதவீதமாக உயர்வு

அமெரிக்காவில் கடந்த மாதத்தில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள். இதன் மூலம் அமெரிக்காவில் வேலையில்லாதோர் விகிதம், கடந்த 16 வருடங்களில் இல்லாத அளவாக 7.6 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2007 கடைசியில் அங்கு பொருளாதார சரிவு ஏற்பட ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 36 லட்சம் பேர் வேலையை இழந்திருப்பதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஜனவரியில் மட்டும் 5,98,000 பேர் வேலையை இழந்திருப்பதால், அங்கு வேலையில்லாதோர் விகிதம் 7.2 சதவீதமாக இருந்தது 7.6 சதவீதமாக உயர்ந்து விட்டது. இது கடந்த 16 வருடங்களில் இல்லாத நிலை என்று அமெரிக்க தொழிலாளர் துறை தெரிவித்திருக்கிறது. 2007 டிசம்பருக்குப்பின் வேலையை இழந்த மொத்தம் 36 லட்சம் பேரில், மூன்றில் ஒரு பங்கினர் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வேலையை இழந்திருக்கிறார்கள். அதுவும் ஜனவரியில் தான் அதிக அளவிலான வேலை இழப்பு நடந்திருக்கிறது. பொதுவாக எல்லா துறைகளிலுமே கடந்த மாதத்தில் வேலை இழப்பு நடந்திருக்கிறது என்கிறார் லேபர் ஸ்டேடிஸ்டிக்ஸ் அமைப்பின் கமிஷனர் கெய்த் ஹால்.
நன்றி : தினமலர்


No comments: