Thursday, September 4, 2008

ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரிப்பு

சர்வதேச அளவில் விமானப்போக்குவரத்து அதிகரித்துவருவதை அடுத்து, ஏர்பஸ் விமானங்களுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா, தனியாரில் முன்னணியில் உள்ள ஜெட் ஏர்வேஸ், கிங்பிஷர் விமான நிறுவனங்கள் ஏர்பஸ் விமானங்களை வாங்குவதில் போட்டி போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'இன்னும் மூன்று ஆண்டில், இந்தியாவில் இருந்து தான் அதிக ஆர்டர்களை எதிர்பார்க்கிறோம்' என்று நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத்தலைவர் கிரன் ராவ் கூறினார். விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏர்பஸ் மற்றும் போயிங். இரண்டுமே, இந்திய விமான நிறுவனங்களுக்கு விமானங்களை தயாரித்து விற்பனை செய்துவருகின்றன. கடந்த 2005ல், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து 500 விமானங்களை இந்திய நிறுவனங்களுக்கு விற்றன. மிக அதிக அளவில் விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கியது அப்போது தான். மீண்டும் 2012க்குள் 500 விமானங்களை இந்திய நிறுவனங்கள் வாங்கும் என்று ஏர்பஸ் விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது. 'விமானப்போக்குவரத்து வர்த்தகத்தில் சற்று தொய்வு இருந்தாலும், இப்போது சீராகி வருகிறது. ஏர்பஸ் விமானங்கள் ஆர்டர் கொடுத்து விட்டு வாபஸ் பெறுவது குறைந்து விட்டது. கடந்த 2005ல் ஆர்டர் செய்யப்பட்ட விமானங்கள் அடுத்த இரண்டாண்டுகளில் டெலிவரி செய்யப் படும். அப்போது மீண்டும் அதிக அளவில் ஆர்டர் வரும்' என்றும் கிரன் ராவ் நம்பிக்கை தெரிவித்தார்.  
நன்றி : தினமலர் 


No comments: