Thursday, January 7, 2010

உணவு பற்றாக்குறை பத்து ஆண்டுகளில் அதிகரிக்கும்

இந்தியா ஏற்கனவே பணவீக்கத்தால் தள்ளாடி வரும் நிலையில், உணவு தானிய பற்றாக்குறையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளில் உணவு தானியங்களுக்கான தேவை 30 சதவீதம் வரை உயரும் என தெரிகிறது.
புவி வெப்பமடைந்ததால், இந்தியாவில் பருவ நிலைகள் மாறின, கடுமையான வெப்பச் சூழல் நிலவியது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, வறட்சி நிலவியது. இது உணவு உற்பத்தியிலும் பற்றாக்குறையை ஏற்படுத்தியது. மக்கள் தொகை பெருக்கமும் கட்டுக்கு அடங்காமல் போனதால், வரும் பத்து ஆண்டுகளுக்கு உணவு உற்பத்தியை 30 சதவீதம் அதிகரிக்க வேண்டிய நிலையில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் கூறியதாவது:

கடந்த 1972ம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை 2007ம் ஆண்டில் 112 கோடியை தாண்டியது. இதனால், உணவு உற்பத்தியை இரு மடங்குக்கும் அதிகமாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டில் 20.34 கோடி டன்கள் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டன. வரும் 2020ம் ஆண்டில் 28.81 கோடி டன்கள் உணவு தானியங்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பால், காய்கறிகள், பழங்கள், சர்க்கரை ஆகியவற்றுக்கு மிகுந்த தேவை ஏற்பட்டுள்ளது.

மண் வளம் குறைந்து வருதல், நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருதல், விவசாய உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இயற்கை வளங்களை பாதுகாத்து, வளப்படுத்துவதன் மூலம் விவசாயத்தில் வளர்ச்சியை எட்டலாம்.

விவசாய உற்பத்தியை பெருக்க மத்திய அரசு சமீபத்தில் புதிய புதிய விஞ்ஞான, தொழில் நுட்பங்களை கையாண்டு வருகிறது. 25 கோடி ரூபாய் செலவில் ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். அதே நேரத்தில் தேசிய உணவு பாதுகாப்பு கழகமும் அரிசி, கோதுமை, பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிக்க ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
நன்றி : தினமலர்


1 comment:

Henry J said...

very nice. but you are ready to work in agriculture field.

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. http://simplygetit.blogspot.com/2009/12/make-money-online-100-orginal-ptc-site.html