Monday, December 14, 2009

தண்ணீரை சுத்தப்படுத்தும் சாதனம்: டாடா நிறுவனம் அறிமுகம்

குடி தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பது அரிதாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு டாடா நிறுவனம் 'ஸ்வாச்' என்ற பெயரில் தண்ணீரை வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பிலிப்ஸ், இந்துஸ்தான் லீவர், எம்.என்.சி.,போன்ற நிறுவனங்கள் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தை அறிமுகப்படுத்தி விட்டன.
இந்த வரிசையில் தற்போது டாடாவும் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக மும்பை, உத்தரபிரசேதம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சுத்தமான குடிநீரை வழங்கும் 10 லட்சம் 'ஸ்வாச்' சாதனங்கள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்த சாதனத்தை பயன்படுத்த மின்சாரம் தேவையில்லை. டாடா கன்சல்டன்சி நிறுவனமும், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனமும், டைட் டான் நிறுவனமும் ஒன்று சேர்ந்து ஸ்வாச் குடிநீர் சாதனத்தை வடிவமைத்துள்ளன. அரிசி தவிடு போன்ற பொருளால் நானோ தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட வடிகட்டும் பொருள் மூன்றாயிரம் லிட்டர் தண்ணீரை வடிகட்டும் திறன் வாய்ந்தது. அதன் பிறகு இந்த வடிகட்டும் சாதனம் தண்ணீரை வடிகட்டுவதை நிறுத்தி விடும். பிறகு வேறு ஒரு பில்டரை மாற்றி கொள்ளலாம். 'ஸ்வாச்' தண்ணீர் சுத்தப்படுத்தும் சாதனத்தின் ஆயுட்காலம் ஐந்து முதல் ஆறாண்டு காலம். மஞ்சள்காமாலை, டைபாய்டு, காலரா,போலியோ உள்ளிட்ட நோய்கள் தண்ணீர் மூலம் பரவுகின்றன. ஸ்வாச் தண்ணீர் வடிகட்டும் சாதனத்தின் மூலம் இந்த நோய்கள் பரவுவதை தடுக்க முடியும், என டாடா நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நன்றி : தினமலர்


No comments: