Sunday, November 8, 2009

தொடர்ந்து கூடுகிறது அமெரிக்காவில் மூடப்படும் வங்கிகளின் எண்ணிக்கை

அமெரிக்காவில் தொடர்ந்து மூடப்படும வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியால் கடும் சரிவை கண்டன. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், அமெரிக்க பொருளாதாரம் மீட்டு வருவதாக தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது அமெரிக்காவில் மூடப் படும் வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள்‌ வெளியாகி உள்ளன. சில வாரங்களுக்கு முன்பு வரை மூடப் பட்ட மொத்த வங்கிகளின் எண்ணிக்கை 103 என்ற நிலை இருந்தது. இப்போது அது 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த வாரம் மட்டும் 5 வங்கிகள் மூடப் பட்டு இருப்பதாகவும், இதனால், 1.5 பில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: