Saturday, August 22, 2009

நோக்கியா நிறுவனம் விரைவில் நெட்புக் தயாரிக்கவிருக்கிறது

செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான நோக்கியா நெட்புக் தயாரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது.
கம்ப்யூட்டரும் செல்போனும் இரண்டு பயன்பாடுகளையும் உள்ளடக்கிய 'நெட்புக்' சாதனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் சர்வதேச தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மூன்றாம் தலைமுறை செல்போன் சேவை தொடங்க உள்ளதால் இதுபோன்ற நெட்புக் சாதனங்களுக்கு மவுசு அதிகரிக்கும். இதன் அடிப்படையில் நெட்புக் தயாரிப்பது குறித்து நிறுவனம் பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார்.மேலும் இந்தியாவில் குறைந்த விலைத் தயாரிப்பு கருவிகள்தான் அதிகம் விற்பனையாகும் என்ற கணிப்பும் பொய்த்துப் போயுள்ளது. நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய உயர் ரக என்-97 மற்றும் இ-75 ரக செல்போன்கள் மிக அதிக அளவுக்கு விற்பனையாகியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினர்.நோக்கியா நிறுவனத் தயாரிப்புகள் மிக அதிக அளவில் விற்பனையாகும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எனவே இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப குறைந்த விலை செல்போன் சாதனங்களை நிறுவனம் தொடர்ந்து தயாரிக்கும் என்றும் அவர் கூறினார்.நோக்கியா நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்பூதூரில் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் மிக அதிக எண்ணிக்கையில் செல்போன் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் செல்போன்களில் 50 சதவீதம் 59 நாடுகளுக்கு ஏற்றுமதியாவதாக அவர் குறிப்பிட்டார்.
நன்றி : தினமலர்


4 comments:

Mukkonam said...

நல்ல சேதி..

பாரதி said...

mukkonam வருகைக்கு நன்றி

Earn Staying Home said...

வரவேற்கலாமா?

பாரதி said...

Earn Staying Home வருகைக்கு நன்றி