Thursday, June 25, 2009

ரூ.50 ஆயிரம் முதலீட்டுக்கு பான் எண் தேவையில்லை

மியூச்சுவல் பண்ட் உட்பட, 'சிப்' திட்டங்களில் 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய, 'பான்' கார்டு எண் கட்டாயம் இல்லை.'சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' (சிப்) திட்டங்களில் முதலீடு செய்ய, 'பான்' கார்டு எண் கட்டாயம் என்று 2007ல், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட் திட் டங்களில் முதலீடு செய்வோரிடையே கலக்கம் ஏற்பட்டது.இது போன்ற திட்டங்களில் தனி நபர்களும், நிறுவனங்களும் முதலீடு செய்வது வழக்கம். தனி நபர் முதலீடுகள் அதிகம் வருவதைத் தான் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எதிர் பார்க்கின்றன. அது தான் சீரான வர்த்தகத்துக்கு வழி வகுக்கும் என்பதால் தான்.கடந்தாண்டு, தனி நபர்களை விட, நிறுவனங்களின் முதலீடுகள் தான் அதிகம். ஆனால், திடீரென பெரும்பாலான முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொண்டதால், சிக்கல் ஏற்பட்டது.தனி நபர்கள் அதிகளவில் முதலீடு செய்யாமல் இருப்பதற்கு காரணம், 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என் பது தான். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்படவே, அரசும் பரிசீலித்தது.'சிப்' வகையிலான முதலீடுகளில் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும் முதலீடு செய்யும் போது, 'பான்' எண் கட்டாயம் இனி இருக்காது. இது தொடர்பாக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு வரும்.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் சங்கத்தலைவர் குரியன் கூறுகையில், 'மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு, 'பான்' கட்டாயம் என்ற வரம்பில் தளர்வு கொண்டு வர மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது' என்று தெரிவித்தார்.
நன்றி : தினமலர்


1 comment:

கலையரசன் said...

அட! பயனுள்ள பதிவு..
பகிர்ந்ததற்க்கு நன்றிங்ண்ணா!!