Saturday, June 13, 2009

இந்த நிதி ஆண்டில் ஏற்றுமதி துறையில் 13 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

ஏற்றுமதி துறையில் இந்த நிதி ஆண்டில் 13 லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாட்டு வர்த்தக மற்றும் அபிவிருத்தி கூட்டமைப்பு ( யுஎன்சிடிஏடி ) தெரிவித்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இன்னும் பொருளாதார மந்த நிலை நீடிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆனால் பண்ணை போன்ற சில தொழில்களில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால் ஏற்றுமதி துறையில் மட்டும் 7.48 லட்சம் பேர் மட்டுமே வேலை இழப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 2009 - 10 நிதி ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 2.2 சதவீதம் குறைந்து விடும் என்று அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களில் அதிகம் சரிவை சந்திக்க இருப்பது பெட்ரோலிய பொருட்கள் தான் என்றும், அதற்கு அடுத்ததாக ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி, மினரல்கள் மற்றும் டெக்ஸ்டைல் பொருட்களில் சரிவு ஏற்படும் என்றும் ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது. இந்த நிதி ஆண்டில் நிலைமை மோசமானா லும் அடுத்த நிதி ஆண்டில் அது சரியாகி விடும் என்றும் அப்போது சுமார் 5 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


No comments: