Saturday, March 7, 2009

பி.எஸ்.என்.எல்., நிறுவனம் மேலும் ஒரு சலுகை

வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எஸ்.டி.டி., கட்டணத்தை 50 சதவீதம் குறைத்துள்ளது. மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவந்த சூழலில் 'லேண்ட் லைன்' இணைப்புகளை சரண்டர் செய்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதைத் தடுக்கும் முயற்சியில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளையும், சலுகை அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
ஏற்கனவே, தொலைபேசி இணைப்புடன் பிராட்பேண்டு இணைப்பு பெறுபவர்களுக்கு அவ்வப்போது சலுகைகளை அறிவித்தது. சமீபத்தில் எஸ்.டி.டி., இணைப்பு பெறுபவர்களுக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டு, தொலைபேசி இணைப்பிற்கான கட்டணமும் குறைக்கப்பட்டது. பேசும் நேரத்திற்கான 'பல்ஸ் ரேட்'டும் அதிகரிக்கப்பட்டு 120 வினாடிகளாக உயர்த்தப்பட்டது. மேலும், 95 இணைப்பு எண்ணாக பயன்படுத்துவது ரத்து செய்யப்பட்டு, '0' இணைப்புடன் எஸ்.டி.டி.,யாக மாற்றப்பட் டது. இந்நிலையில் எஸ்.டி.டி., கட்டணம் தற்போது 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., நெட்ஒர்க் மற்றும் மற்ற நெட்ஒர்க்கில் தமிழகம் முழுவதும் பேச இரண்டு நிமிடத்திற்கு 50 காசுகள் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு 50 கி.மீ., தொலைவிற்குள் பேசுவதற்கான 'பல்ஸ் ரேட்' 90 வினாடிகளிலிருந்து 120 வினாடிகளாக உயர்த்தப்பட்டு கட்டணம் 67 காசுகளிலிருந்து 50 காசுகளாக குறைக்கப்பட்டுள் ளது.
தமிழகத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு 50 கி.மீ.,க்கு அதிகமான தொலைவிற்கு பேசுவதற்கான 'பல்ஸ் ரேட்' ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடமாக உயர்த்தப்பட்டுள்ளதுடன், கட்டணம் ஒரு ரூபாயிலிருந்து 50 காசுகளாக குறைக்கப்பட்டுள் ளது. இந்த கட்டணம் கடந்த 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான கட்டணம் தற்போது ஒரு நிமிடத்திற்கு 80 காசுகளிலிருந்து 40 காசுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் எஸ்.டி.டி., பேச வாடிக்கையாளர்கள் இதுவரையில் ஒரு நிமிடத்திற்கு 1.20 காசுகள் கட்டணம் செலுத்தி வந்தனர். இது தற் போது 60 காசுகளாக குறைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


No comments: