Sunday, March 1, 2009

தபால் நிலையங்களில் மருந்துகள் விற்பனை

தற்போது, லாபமின்றி செயல்பட்டு வரும் தபால் நிலையங்களின் நிலையை மாற்றுவதற்காக, அவற்றில், மருந்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் இத்திட் டம் அமலுக்கு கொண்டு வரப் பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 9,124 கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களில் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது. ஆஸ்பிரின், பாராசிட்டமால் போன்ற தலைவலி, காய்ச்சல், இருமலுக்கான மருந்துகள், வைட்டமின், தாதுக்கள் மருந்து, பிற பொது மருந்துகள் இவற்றில் விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமின்றி, சாதாரண பசை போன்ற, ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும் பொருட்களும் தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. சாதாரண மக்களும் இணைய தள வசதியை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தபால் நிலையங்களில் இணைய தள வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், உள்ளூர்வாசிகள் குறைந்த கட்டணத்தில், கம்ப் யூட்டர் கல்வி பெறுவதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டமாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆறு தபால் நிலையங்களில் பரிட்சார்த்த ரீதியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால், படிப்படியாக நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட உள்ளது. தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் பொருட் கள், மற்ற கடைகளை விட குறைவாக நிர்ணயிக்கப்படும். அதிக லாபமின்றி மருந்து மற்றும் ஸ்டேஷனரி பொருட்கள் விற் பனை செய்யப்படுவதால், இத்திட்டம் வெற்றி பெறும் என்று அதிகாரிகளால் கருதப்படுகிறது. தற்போது, கிராம தபால் நிலையங்கள் மூன்று மணி நேரம் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. படிப்படியாக வேலை நேரத்தை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. விற்பனையின் அடிப்படையில், தபால் நிலைய ஊழியர்களுக்கு ஊக்கத் தொகையும், கமிஷனும் வழங்கப்படும். இதனால், இத்திட்டத்தில் தபால் ஊழியர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்படுத்தவும் முடியும்.
நன்றி : தினமலர்


2 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

நல்ல விஷயம் தான்...ஆனால், தகுந்த மருத்துவரின், பரிந்துரை இல்லாமல், சாதாரணமான காய்ச்சல்,தலைவலி...போன்ற மருந்துகளை...சரியான அளவு தெரியாமல் உட்கொள்வது....பக்க விளைவுகளை ஏற்படுத்தும்...இதற்கு யார் பொறுப்பு...!!!இந்த விஷயத்தை பற்றி விவாதம் செய்ய வேண்டுமென்றால்...பல விஷயங்கள் உள்ளன...மீண்டும் ஒரு பின்னூட்டத்தில்...வருகிறேன்....நன்றி...

RAMASUBRAMANIA SHARMA said...

"kindly send email followups to my mail id...."