Thursday, August 14, 2008

கள்ள நோட்டுக்களை கண்டறிய ரிசர்வ் வங்கி வழிமுறைகள்

ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்கள் கலந்து உள்ளதா என்பதை கண்டுபிடிக்க வழிகாட்டி முறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.உ.பி.,யில் சமீபத்தில் வங்கி கருவூலத்தில் இருந்து நிஜ ரூபாய் நோட்டுக்களுடன் போலி ரூபாய் நோட்டுக்கள் கலந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ளது. போலி நோட்டுக்களை கண்டறிய ரிசர்வ் வங்கி அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் வழிமுறைகளை அனுப்பி வருகிறது.உண்மையான ரூபாய் நோட்டுக்களைப் பற்றி அறிய பொதுமக்கள் ரிசர்வ் வங்கியின், இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.அசல் ரூபாய் நோட்டுக்களை கண்டறிய சில வழிமுறைகள்:* ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை லேசாக மடித்துப் பார்த்தால், அதில் பச்சை நிறத்துடன் மற்றொரு பக்கத்தின் நீல நிறமும் பார்க்கமுடியும்.* இந்தியில் அச்சிடப்பட்டுள்ள ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவை தொட்டுப் பார்த்தால் அதன் எழுத்துக்கள் சிறிது மேடாக இருக்கும்.
* ஆயிரம் ரூபாய் நோட்டில், 'பாரத்' என்ற சொல் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும்.
* மகாத்மா காந்தியின் படம், ரிசர்வ் பாங்கின் சீல் கேரன்டி, அசோக ஸ்தம்பம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் கையெழுத்து 10 ரூபாய் நோட்டுத் தவிர மற்ற எல்லா நோட்டுக்களிலும் விசேஷ இன்டாக்லியோ பிரின்டிங் கால் தயார் செய்யப்பட்டுள்ளன.
* 'அல்ட்ரா வயலட்' விளக்கின் உதவியால் நோட் டின் விசேஷ ஆப்டிகல் பைபர் மற்றும் மையை பார்க்க முடியும்.
நன்றி : தினமலர்

No comments: