Friday, July 11, 2008

2030ல் உலக அளவில் பெட்ரோலிய தேவை 50 சதவீதம் அதிகரிக்கும்


வியன்னா : இப்போதில் இருந்து 2030ம் வருடத்திற்குள் உலக அளவில் பெட்ரோலிய தேவை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று ஓபக் ( பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் அமைப்பு ) தெரிவித்திருக்கிறது. முன்னேறி வரும் நாடுகளில் கார்களின் பயன்பாடு பெருமளவு அதிகரித்திருப்பதால் பெட்ரோலுக்கான தேவை 50 சதவீதம் அதிகரிக்கும் என்று அது கருத்து தெரிவித்திருக்கிறது. ஓபக் அமைப்பின் 2008 வருடத்திற்கான அறிக்கையில், 2030ல் இப்போதாய தேவையை விட 50 சதவீதம் அதிகமாக பெட்ரோலிய தேவை இருக்கும் என்பதால் அதனை சமாளிக்க நம்மிடம் இருக்கும் எண்ணெய் கிணறுகளில் இருந்து புது தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கச்சா எண்ணெய் எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. டாலரின் மதிப்பு குறைந்திருப்பதாலும் பெட்ரோல் சப்ளை குறித்து வர்த்தகர்களால் பரப்பப்படும் தவறான தகவல்கள் போன்றவற்றால்தான் இப்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருப்பதாக ஓபக் தெரிவித்திருக்கிறது. எனினும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருப்பது குறித்து அது கவலை தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டுகளில் கச்சா எண்ணெய்க்கு குறைந்த அளவே விலை இருந்ததால், ஓபக் நாடுகளால் எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்த அதில் அதிக அளவில் முதலீடு செய்ய முடியாமல் போய் விட்டது. எனவே தான் சீனா போன்ற பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் எண்யெண்ய் தேவைக்கு தகுந்தபடி சப்ளை செய்ய முடியாமல் போனது. கடந்த வருடங்களில் தேவைக்கு அதிகமாகவே கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வரும் காலங்களில் எவ்வளவு எடுக்க வேண்டும் என்று செப்பரில் நடக்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் 2012 வாக்கில் கச்சா எண்ணெய்யின் தேவையில் நாள் ஒன்றுக்கு 31 மில்லியன் பேரல்கள் குறையும் என்று எதிர்பார்ப்பதாக ஓபக் தெரிவித்திருக்கிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, பெட்ரேலை நம்பி இருக்கும் நிலையில் இருந்து மாறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறையும் என்று ஓபக் நினைக்கிறது.
நன்றி : தினமலர்

No comments: