Tuesday, December 2, 2008

கச்சா எண்ணெய் உற்பத்தி குறைக்க 'ஒபெக்' முடிவு

எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஒபெக்), இந்த மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் அப்துல்லா சலீம் எல்-பத்ரி கூறியதாவது: எண்ணெய் கையிருப்பு அதிகமாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வரும் சூழ்நிலையில், உற்பத்தியை குறைப்பதே சரியான நடவடிக்கை என தெரிகிறது. இதனால், இம்மாதத்துக்கான உற்பத்தியை கணிசமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு உற்பத்தி குறைக்கப்படும் என்பதை தற்போது தெரிவிக்க முடியாது. அடுத்தாண்டு முதல் ஆறு மாதங்கள் வரை கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்க்க முடியாது. இவ்வாறு அப்துல்லா சலீம் கூறினார்.
நன்றி : தினமலர்


1 comment:

பாரதி said...

Chuttiarun வருகைக்கு நன்றி ,நான் இணைப்பு கொடுக்க முயற்சி செய்தேன் ,ஆனால் அதில் error வருகிறது.